1. Home
  2. தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 69 காலிப்பணியிடங்கள்...8ம் தேர்ச்சி போதும்..!

1

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவ பிரிவு, திருநெல்வேலில் மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் தகுதிக்கேற்று நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்
நேர்காணல் கொண்டு நிரப்பப்படும் இடங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
மருத்துவ அதிகாரி 4
மருத்துவமனை தர மேலாளர் 1
மிசிரோபயோலொஜிஸ்ட் 1
மருத்துவ மருத்துவர் 4
சமூக சேவகர் 1
ஐடி ஒருங்கிணைப்பாளர் 1
மொத்தம் 12

நேர்காணல் இல்லாத இடங்கள்
செவிலியர் 9
நடுத்தர நிலை ஆரோக்கியம் வழங்குபவர் 6
Trauma பதிவுத்துறை உதவியாளர் 1
ஒடி டெக்னீஷியன் 2
மருந்தாளுனர் 1
உதவியாளருடன் இணைந்த டேட்ட எண்டரி ஆப்ரேட்டர் 2
பல் உதவியாளர் 1
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் 6
டிரைவர் 1
பிசியோதெரபிஸ்ட் 3
ரேடியோகிராபர் 3
பல்துறை மருத்துவமனை உதவியாளர் 5
தூய்மை பணியாளர் 3
மருத்துவமனை உதவியாளர் 3
நோய்த்தடுப்பு சிகிச்சை மருத்துவமனை ஊழியர் 1
பாதுகாப்பாளர் 1
ONC பாதுகாப்பாளர் 4
ஆய்வக உதவியாளர் 1
ஒடி உதவியாளர் 1
பல்துறை பணி ஊழியர் 3
மொத்தம் 57
மொத்த காலிப்பணியிடங்கள் 69
வயது வரம்பு
  • 01.11.2024 தேதியின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் அதிகபடியாக 35 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
  • பல்துறை மருத்துவமனை உதவியாளர், தூய்மை பணியாளர், மருத்துவமனை உதவியாளர், தூய்மை பணியாளர், பாதுக்காப்பாளர், ஆய்வக உதவியாளர், ஒடி உதவியாளர் மற்றும் பல்துறை பணி ஊழியர் ஆகிய பதவிகளுக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
  • மருத்துவ பணியிடங்களுக்கு பதவிக்கான தகுந்த கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு கணினி அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு பின்னர் கணினி அறிவியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பல்துறை மருத்துவமனை ஊழியர், மருத்துவமனை உதவியாளர், தூய்மை பணியாளர் ஆகிய பதவிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • டிரைவர் மாதம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் ஓட்டுநர் உரிமம் தேவை.

சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் அதிகபடியாக ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் நேர்காணல் உடைய பணிகள் மற்றும் நேர்காணல் இல்லாத பணிகள் என்று இரண்டு வகையில் பிரிக்கப்படுகிறது. தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • பிறப்பு சான்றிதழ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள்
  • வாக்காளர், குடும்ப, ஆதார் அட்டை
விண்ணப்பிக்க கடைசி நாள்
விவரம் முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2024 மாலை 5 மணி
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்

குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரிலோ அல்லது தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like