62 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. வீடு முழுவதும் ரத்தம்.. மாடியில் நடந்த பயங்கரம் !

62 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. வீடு முழுவதும் ரத்தம்.. மாடியில் நடந்த பயங்கரம் !

62 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. வீடு முழுவதும் ரத்தம்.. மாடியில் நடந்த பயங்கரம் !
X

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 1000-க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் ஜெகநாதன்(75) அவருடைய மனைவி சுலோச்சனா(62) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.

அதில், ஜெகநாதன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகம் அடைந்து அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. 

இதேபோல் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகநாதன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரின் மனைவி சுலோச்சனாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஜெகநாதன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கேபிள் ஒயர் எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஜெகநாதன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்ளே அவரின் மனைவி கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து பீர்க்கன்கரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it