அர்ச்சகர்களுக்கு 60 % பங்கு தொகை.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

அர்ச்சகர்களுக்கு 60 % பங்கு தொகை.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

அர்ச்சகர்களுக்கு 60 % பங்கு தொகை.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!
X

“தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீத பங்கு வழங்கப்படும்” என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (4-ம் தேதி) இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து, பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீத பங்கு தொகை தரப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டணச் சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும்.

மாநிலம் முழுவதும் 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடியில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதுவரையில் 94 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 592.69 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Next Story
Share it