1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவில் இரு பதவிகளுக்கு 60 பேர் போட்டி... இருக்கு ஒரு சம்பவம் !!

அதிமுகவில் இரு பதவிகளுக்கு 60 பேர் போட்டி... இருக்கு ஒரு சம்பவம் !!


தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இப்பதவிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவிற்கு இம்முறை 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார் ஆகிய உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பாணையை இந்திய தேர்தல் ஆணையம் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிட உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலியாக உள்ள 6 உறுப்பினர் பதவிகளில் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டு இடங்கள் மட்டுமே அதிமுகவிற்கு கிடைக்க உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கு அதிமுகவில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது.
இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கு போட்டியிட. அதிமுக தலைமைக்கு சுமார் 60 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர். அதேபோல முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.

அதிமுகவில் இரு பதவிகளுக்கு 60 பேர் போட்டி... இருக்கு ஒரு சம்பவம் !!
அதிமுகவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான செம்மலைக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அதிமுக தலைமை தரவில்லை. அப்பொழுது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளார். அதேபோல மாநிலங்களில் அதிமுக சார்பில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்று அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம் தோல்வி அடைந்தனர். கட்சியின் முன்னணி தலைவர்களாக இருக்க கூடிய இவர்கள் தாங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் என்கிற முயற்சியிலும் தீவிரமாக உள்ளனர். இதேபோல சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஜேசிபி பிரபாகரும், பட்டியலினத்தை சேர்ந்த டாக்டர் வேணுகோபாலும் இந்தப் பதவிக்கு கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர் ஒருவருக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் யார் என்ற அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like