60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை..பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது!
பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 2025ம் ஆண்டிற்கான பிரதமர் பார்னியர் முன்மொழிந்த பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவானது. இதனால் நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் பலர் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில், 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.