இந்தியாவில் டிக் - டாக் உட்பட 59 ஆப்களுக்கு தடை !! மத்திய அரசு அதிரடி..

இந்தியாவில் டிக் - டாக் உட்பட 59 ஆப்களுக்கு தடை !! மத்திய அரசு அதிரடி..

இந்தியாவில் டிக் - டாக் உட்பட 59 ஆப்களுக்கு தடை !! மத்திய அரசு அதிரடி..
X

எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ; தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்பத்தின் (பொது மக்களால் தகவல்களை அணுகுவதைத் தடுப்பதற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்புகள்) விதிகள் 2009 மற்றும் அச்சுறுத்தல்களின் வெளிப்படும் தன்மையைக் கருத்தில் கொண்டு, 59 செயலிகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

அவை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரபட்ச செயல்களில் ஈடுபட்டுள்ளன.” என கூறியுள்ளது.

Newstm.in

Next Story
Share it