50 % ஜவுளி உற்பத்தி நிறுத்தம்!!துணிமணிகள் இருமடங்காக விலை உயரும் அபாயம்!!

50 % ஜவுளி உற்பத்தி நிறுத்தம்!!துணிமணிகள் இருமடங்காக விலை உயரும் அபாயம்!!

50 % ஜவுளி உற்பத்தி நிறுத்தம்!!துணிமணிகள் இருமடங்காக விலை உயரும் அபாயம்!!
X

கடந்த 2ம் தேதி அனைத்து நூல் விலையும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானது. கடந்த மாதம் ரூ.440 ஆக இருந்த இதன் விலை தற்போது ரூ.40 அதிகரித்து ரூ.480க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று ரகம் வாரியான நூல்களின் விலையும் கிலோ ரூ.40 அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வால் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் அதிர்ச்சிக்குள்ளனார்கள்.பருத்தி பஞ்சு விலையேற்றத்தால் நூலின் விலையும் விலையும் உயர்ந்துள்ளது. உள்நாட்டில் தற்போது பருத்தி பஞ்சுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் பருத்தி சீசன் தொடங்க இன்னும் 6 மாதங்கள் ஆகும். அதுவரை நூற்பாலைகள் இருக்கிற கையிருப்பு பஞ்சை வைத்தோ அல்லது இறக்குமதி செய்தோ தான் நூலை தயாரிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர்

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு ஜவுளித்துறை கோரிக்கை ஒன்றை வைத்தனர். தற்போது நிலவி வரும் பஞ்சுதட்டுப்பாட்டை சரி செய்ய, வெளிநாட்டில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யும் போது 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற மத்திய அரசு, வருகிற செப்டம்பர் மாதம் வரையிலான இறக்குமதி வரியை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கு ஜவுளித்துறை சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த விலை உயர்வால் 5 லட்சம் தொழிலாளர்கள் பின்னலாடை தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நூல் விலையேற்றத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை துறை முற்றிலும் பாதிக்கப்பட்டு உற்பத்திக்கு பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் புது ஆர்டர்களை எடுக்க பின்னலாடை நிறுவனத்தினர் தயங்கி வருகின்றனர்.

திருப்பூர்

இதன் காரணமாக நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை தொழில் சங்கத்தினர் வருகிற 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக முன்பே அறிவித்துள்ளனர். அந்த 6 நாட்களும் பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘‘தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் இனி தினசரி ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் புதிய நூல்களை 15 நாட்களுக்கு வாங்குவதில்லை எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை இனி எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story
Share it