சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க வேண்டும் !! நடிகை கீர்த்தி சுரேஷ் தந்தை வேண்டுகோள்

சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க வேண்டும் !! நடிகை கீர்த்தி சுரேஷ் தந்தை வேண்டுகோள்

சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க வேண்டும் !! நடிகை கீர்த்தி சுரேஷ் தந்தை வேண்டுகோள்
X

கொரோனா தாக்கத்தால் பல துறைகள் முடங்கி உள்ளது. இதற்கு சினிமா துறையும் விதிவிலக்கு அல்ல. கோடிகளில் புரளும் சினிமா துறையும் முடங்கி இருக்கிறது. குறிப்பாக மலையாள திரையுலக தயாரிப்பளர்களை இது ரொம்பவே பாதித்துள்ளது.

ஒவ்வொரு பணத்தியும் எண்ணி , எண்ணி செலவு செய்து குறைந்த நாட்களுக்குள் படத்தை தயாரித்து வெளியிட்டு ஓரளவு லாபம் பார்க்க நினைக்கும் அவர்களுக்கு இந்த நிலைமை எப்போது சீராகும் என்கிற கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், மலையாள திரையுலக தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியமானவருமான சுரேஷ் குமார் கூறும்போது ;

ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ள 26 படங்கள் வெவ்வேறு விதமான இறுதிக்கட்ட பணிகளில் அப்படியே நிற்கின்றன. படப்பிடிப்பு பாதியுடன் நிறுத்தப்பட்ட படங்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

இந்த ஊரடங்கு சூழல் சீராகி முன்புபோல திரையுலக பணிகள் எப்போது ஆரம்பிக்கும் என தெரியவில்லை. அப்படி சீரடையும்போது தயாரிப்பளர்களின் பாதிப்பில் பங்கெடுக்கும் விதமாக நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சம்பளத்தில் 50 சதவீதம் குறைத்துக் கொள்ள முன்வரவேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் நட்டத்தில் இருந்து ஓரளவுக்காவது மீள முடியும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it