1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் , OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் !! நீதிமன்றத்தில் அதிமுக மனு..

மருத்துவ படிப்பில் , OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் !! நீதிமன்றத்தில் அதிமுக மனு..


முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் , மருத்துவப் படிப்பில் குளறுபடிகள் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்து வருகிறது. எனவே , முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி அதிமுக , திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ படிப்பில் , OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் !! நீதிமன்றத்தில் அதிமுக மனு..

மேலும் மாணவர்களின் நலன் கருதி , முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தேசிய அளவிலான இடங்களை நிரப்புவதற்காக முன்பு வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் , தேசிய அளவிலான தொகுப்புக்கு தமிழகம் ஒதுக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது , ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் பொது நோக்கத்திற்காக , தமிழக அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத்தக்கது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால், இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என்றும், எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும், மாநில அரசின் கொள்கை ரீதியில் , தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து, மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்த அந்த மனுவில் , ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாதது , அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், தகுதியான மாணவர்களின் மருத்துவர் கனவு பறிபோக மத்திய அரசு காரணமாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like