கொரோனா பணியில் உயிரிழந்தால் 50 லட்சம் !! முதலமைச்சர்  அறிவிப்பு.

கொரோனா பணியில் உயிரிழந்தால் 50 லட்சம் !! முதலமைச்சர்  அறிவிப்பு.

கொரோனா பணியில் உயிரிழந்தால் 50 லட்சம் !! முதலமைச்சர்  அறிவிப்பு.
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மேலும் கொரோனாவை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ;

கொரோனா வைரஸ் தாக்குதலில் முன்னின்று போராடும் அரசுத் துறைகளான மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். உயிரிழப்போரின் உடல்கள் , அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் , செவிலியர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

Newstm.in

Next Story
Share it