சென்னையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
X

சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் வேலைப் பார்த்து வந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த தனியார் சேனலில், பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனோ தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த 4 பேருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேர் நிருபர்கள் என்றும் மேலும் பலருக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும், பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் ராயபுரத்தில் தங்கியிருந்த உதவி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

newstm.in

Next Story
Share it