1. Home
  2. தமிழ்நாடு

டிக்டாக் செயலிக்கு தடை.. தாய் நிறுவனத்திற்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு !



லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

டிக்டாக் செயலிக்கு தடை.. தாய் நிறுவனத்திற்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு !

இந்நிலையில் தேசப் பாது காப்பு, தனிநபர் அந்தரங்க உரிமை ஆகிய காரணங்களுக்காக சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளான டிக்-டாக், ஷேர்-இட், யுசி புரவுசர், பைடு மேப், ஹலோ, எம்ஐ கம்யூனிட்டி, கிளப் பேக்டரி, வீ-சாட், யுசி நியூஸ் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இது தொடர்பாக சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ இதழில் இது தொடர்பான வெளியான செய்தியில், சீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பதிவிறக் கம் செய்யப்பட்டதை விட இரு மடங்கு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு தடை விதித்ததால், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நம்பிக்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 

newstm.in 

Trending News

Latest News

You May Like