1. Home
  2. தமிழ்நாடு

4,000 உதவி பேராசிரியர் நியமனம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

4,000 உதவி பேராசிரியர் நியமனம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

"அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பதவிகளில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 10 நாட்களில் வெளியிடப்படும்" என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது; "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான நியமன அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. இன்னும் 10 நாட்களில் வெளியிடும்.இதில் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வுக்கு தகுதி பெறும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, விதிகளுக்கு உட்பட்டு சலுகை அளிக்கப்படும்.


அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு 1,030 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரைவில் பணி நியமன ஆணை வழங்க உள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை படிப்புக்கான இடங்களுக்கு 'வராண்டா அட்மிஷன்' முறையில் மாணவர் சேர்க்கை நடக்கும்.


கவுரவ விரிவுரையாளர் காலி பணியிடங்கள் இதுவரை கல்லூரிகளில் நேரடியாக நிரப்பப்பட்டன. இனி, கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் மண்டல அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படும்" என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Trending News

Latest News

You May Like