1. Home
  2. தமிழ்நாடு

400 செல்ஃபி எடுத்த கரடி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!!

400 செல்ஃபி எடுத்த கரடி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!!

அமெரிக்காவில் கரடி ஒன்று விலங்குகளை கண்காணிக்க வைத்த கேமராவில் பல போஸ்களில் 400 செல்பிகள் எடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கொலராடோவில் உள்ள பூங்கா ஒன்றில் தனியார் அமைப்பு ஒன்று வனவிலங்குகளில் வாழ்விடங்களை தடையின்றி கண்காணிக்க விரும்பியது. இதனையடுத்து பூங்கா காவலர்கள் 46,000 ஏக்கரில் 9 கேமராக்களை பொருத்தினர்.

அதன் மூலம் விலங்குகள் எவ்வாறு அந்தப் பகுதியைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டறிய திட்டமிட்டனர். இதன் பிறகு, அப்பகுதியில் வைக்கப்பட்ட 9 கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பூங்கா காவலர்கள் பதிவாகி இருந்து புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.


400 செல்ஃபி எடுத்த கரடி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!!

ஏனென்றால் அதில் ஏராளமான செல்பி புகைப்படங்கள் இருந்தன. பதிவாகி இருந்த 580 புகைப்படங்களில், சுமார் 400 கரடியின் செல்பிகள் என்று பூங்கா காவலர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் மொபைல், கேமரா எல்லாம் சகஜமாகிவிட்டது. குழந்தைகள் கூட விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர். ஆனால், தொழில்நுட்பத்தை விலங்குகள் கூட தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம்.

newstm.in

Trending News

Latest News

You May Like