1. Home
  2. தமிழ்நாடு

ஊக்கமருந்து புகார்.. தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடை !

ஊக்கமருந்து புகார்.. தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடை !


தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட மருந்து உறுதி செய்யப்பட்டதால் அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800மீ பிரிவில் வெற்றி பெற்று தங்கம் வென்றார் கோமதி மாரிமுத்து. 

அப்போது அவர் மீது ஊக்கமருந்து புகார் அளிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. முதற்கட்ட சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக உறுதி செய்யப்பட்டதால் அவர் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து அடுத்தகட்ட சோதனையிலும் கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட மருந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார். 

இதேடுமட்டுமல்லாமல் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18, 2019 முதல் மே 17, 2019 வரையிலான கோமதியின் சாதனைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தெரிவித்துள்ள கோமதி மாரிமுத்து, தடையை எதிர்த்து நான் மேல் முறையீடு செய்ய உள்ளேன். மாநில அரசு எனக்கு உதவியாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து எதையும் நான் பயன்படுத்தவில்லை. நான் சாப்பிட்ட அசைவ உணவில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in 

Trending News

Latest News

You May Like