திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து 4 மாடி அடுக்குமாடி கட்டிடம்: 5 பேர் பலி..பலர் கவலைக்கிடம்..!!

திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து 4 மாடி அடுக்குமாடி கட்டிடம்: 5 பேர் பலி..பலர் கவலைக்கிடம்..!!

திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து 4 மாடி அடுக்குமாடி கட்டிடம்: 5 பேர் பலி..பலர் கவலைக்கிடம்..!!
X

ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல சரிந்து தரைமட்டமானதில் அந்த கட்டிடத்தில் இருந்த 25 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

Jordan

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் 5 பேரை சடலமாக மீட்கப்பட்டது. அதே சமயம் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே கட்டிட இடிபாடுகளில் இன்னும் 10-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.



இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it