4 கொலை வழக்கு !! நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் பிரபலமான ரவுடி கொலை

4 கொலை வழக்கு !! நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் பிரபலமான ரவுடி கொலை

4 கொலை வழக்கு !! நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் பிரபலமான ரவுடி கொலை
X

புதுச்சேரி முதலியார்பேட்டை அவ்வை நகர் பகுதியில் 35 வயது மதிப்புள்ள வாலிபர் வெட்டு காயங்களுடன் இரத்த வெளத்தில் சடலாமக இருப்பதாக அவ்வழியே சென்ற மக்கள் முதலியார் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவர் யார் என்றும் கொலை சம்பவத்தில் யார் ஈடுப்பட்டுள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முதற்கட்ட விசாரணையில் முகம் சிதைக்கப்பட்டும், கல்லை போட்டு கொலை செய்யப்படிருந்தது கோவிந்த சாலை சேர்ந்த பிரபல ரவுடி அமுல் என்கிற அமுல்தாஸ் என்றும் இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்ளது என்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் கொலை செய்தவர்களை போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர் , கொலையாளிகளை பிடித்த பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலிசார் தகவல் தெரிவித்தனர்.

Newstm.in

Next Story
Share it