1. Home
  2. தமிழ்நாடு

மூடநம்பிக்கையின் உச்சம்..!! கடவுளை நேரில் சந்திக்க உண்ணாவிரதம் இருந்த 4 பேர் மரணம்..!!

மூடநம்பிக்கையின் உச்சம்..!! கடவுளை நேரில் சந்திக்க உண்ணாவிரதம் இருந்த 4 பேர் மரணம்..!!

இயேசுவை நேரில் சந்திக்க உண்ணாவிரதம் இருந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கென்யா நாட்டின் கிலிஃபி கவுண்டி என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மத போதகர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சிலர் இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டு வந்த நான்கு பேர், மாகரினி பகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் விரதம் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூடநம்பிக்கையின் உச்சம்..!! கடவுளை நேரில் சந்திக்க உண்ணாவிரதம் இருந்த 4 பேர் மரணம்..!!

இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "இயேசுவைச் சந்திக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உள்ளூர் போதகர் ஒருவர் கூறியுள்ளார். பின்னர், அவர்கள் வனத்திற்கு சென்று விரதம் இருந்துள்ளனர். பிரார்த்தனை நடைபெறுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் வனப்பகுதிக்கு சென்றனர். உண்ணாவிரதத்தில் 15 பேர் பங்கேற்பதை கண்டோம். ஆனால், 11 பேர் மட்டுமே உயிருடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் தலைவரான மாக்கன்சி என்தெங்கே என்பவரால் இந்த குழு மூளைச்சலவை செய்யப்பட்டது.

உலகம் அழிவதை தவிர்க்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என மத போதகர் சொன்னதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், விரைவாக பரலோகத்திற்கு சென்று இயேசுவைச் சந்திக்க தங்களைப் உண்ணாவிரதம் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like