ஊரடங்கிலும் அடங்காத கொள்ளை கும்பல்.. ரூ3.8 லட்சம், நகை பறிமுதல் !

ஊரடங்கிலும் அடங்காத கொள்ளை கும்பல்.. ரூ3.8 லட்சம், நகை பறிமுதல் !

ஊரடங்கிலும் அடங்காத கொள்ளை கும்பல்.. ரூ3.8 லட்சம், நகை பறிமுதல் !
X

திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியில் வாகன சோதனையில் ரூ3.8 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் திருவள்ளூர் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமழிசை பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த பாலாஜி (21), ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சரண் (22) மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த குமார் (எ) குள்ளகுமார் (42) என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த ரூ3.8 லட்சம் பணம், 5 சவரன் நகை இருப்தை அறிந்து பைக்குடன் அதனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் விசாரணையில் அவை அணைத்து பல இடங்களில் திருடிய நகை, பணம் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in 

Next Story
Share it