1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டம்..!

1

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கோவையில் நேற்றுசெய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதல் விபரங்கள் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளோம்; ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் நேற்று கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது. கோவையில் 32 ரயில் நிலையங்கள் இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆரம்ப கட்ட பணிகளை துவங்க இருக்கின்றோம். 10 ஹெக்டேர்களை இரு வழித்தடங்களுக்கும், 16 ஹெக்டேர் ரயில் நிலையங்களுக்காக கையகப்படுத்த வேண்டி உள்ளது. கோவை நீலாம்பூரில் மெட்ரோ ரயில் டெப்போ அமைக்கப்படுகிறது. கோவையில் நிலம் கையகப்படுத்த ஆயத்த பணிகளை துவங்கி இருக்கிறோம் என எம்.ஏ.சித்திக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like