ஒரு பணியிடத்துக்கு 300 பேர்.. குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்..!

ஒரு பணியிடத்துக்கு 300 பேர்.. குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்..!

ஒரு பணியிடத்துக்கு 300 பேர்.. குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்..!
X

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பல்வேறு பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 7,306 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்று இருப்பதால், முதல் ஒரு வாரத்தில் சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாளாக நேற்று (28-ம் தேதி) அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 24-ம் தேதி நிலவரப்படி, இந்த பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. அளித்த விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், இரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 21 லட்சத்து 11 ஆயிரத்து 357 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பப் பதிவு செய்தவர்களின் புள்ளிவிவரங்களுடன் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது, ஒரு பணியிடத்திற்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டியிடுகின்றனர்.

விண்ணப்பப் பதிவு முடிந்துள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

Next Story
Share it