அடியோடு சாய்ந்து கால்வாயில் விழுந்த 3 மாடி கட்டிடம்.. வைரலாகும் வீடியோ !

அடியோடு சாய்ந்து கால்வாயில் விழுந்த 3 மாடி கட்டிடம்.. வைரலாகும் வீடியோ !

அடியோடு சாய்ந்து கால்வாயில் விழுந்த 3 மாடி கட்டிடம்.. வைரலாகும் வீடியோ !
X

மிட்னாபூர் மாவட்டத்தில் மூன்று மாடி கட்டுமான கட்டிடம் இடிந்து அதன் அருகிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் கவிழ்ந்தது. 

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் இருந்து 120 கி.மீ தூரத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளது நிசிந்தாபூர் கிராமம். அங்குள்ள கால்வாயின் அருகில் மூன்று அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. 

நீர்ப்பாசனக் கால்வாய்க்கு மிக அருகில் அந்த வீடு கட்டப்பட்டு இருந்ததால் அரசாங்க நிலத்தில் சட்டவிரோத கட்டுமானமாக அந்த வீடு இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அந்த வீட்டினை ஒட்டி செல்லும் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவுப் பணிகள் காரணமாக அதன் அஸ்திவாரம் பலவீனமடைந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு கட்டிடத்தில் விரிசல் உருவாக ஆரம்பித்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக கால்வாய் பள்ளத்தால் கட்டிடத்தின் அடித்தளம் ஸ்திரத்தன்மையை இழந்தது. இதன் காரணமாக அந்த வீடு இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின் 30 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

newstm.in 


 

Next Story
Share it