கணவர் இறந்து 3 மாதம்.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. பேசுபொருளான மீனாவின் பிறந்தநாள்..!

கணவர் இறந்து 3 மாதம்.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. பேசுபொருளான மீனாவின் பிறந்தநாள்..!

கணவர் இறந்து 3 மாதம்.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. பேசுபொருளான மீனாவின் பிறந்தநாள்..!
X

கணவர் இறந்து மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் நடிகை மீனா தனது 46வது பிறந்த நாளை தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி வித்யாசாகர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று, நடிகை மீனாவின் 46வது பிறந்த நாள். இதையடுத்து, நடிகை சினேகாவின் சகோதரி சங்கீதா, தொழிலதிபர் ரேணுகா பிரவீன் மற்றும் கீது நாயுடு ஆகியோருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் நடிகை மீனா. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், கணவர் இறந்து மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடி இருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Tags:
Next Story
Share it