சீனாவிலிருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வருகிறது !!

சீனாவிலிருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வருகிறது !!

சீனாவிலிருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வருகிறது !!
X

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும்  கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாரஷ்டிரா , டெல்லி , தமிழகம் மாநிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதுவரை பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வருவதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 15 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா , இல்லயா என்பதை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர். உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் , இந்த கருவியின் பயன் அதிகமாகி இருக்கிறது.

பரிசோதனை கருவிகள் , மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சீனாவில் இருந்து கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்சொய் மாகாணத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், 3 லட்சம் ரேபிட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it