அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனா !! மருத்துவமனை மூடல்  !! மரத்தடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை..

X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800 - க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன் பாதிப்பு சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாகி வந்ததால் , இந்த மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

தற்போது மேலும் சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பணியில் ஈடுபடும் நபர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டதால் வளாகத்தில் உள்ள மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Newstm.in

Next Story
Share it