1. Home
  2. தமிழ்நாடு

2000 நோட்டுகளை உடனடியாக மாற்ற முடியாது..!!


ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக மற்ற முடியாது. வரும் மே 23 முதல் தான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான நடைமுறைகள் அமுலுக்கு வருகிறது.

2000 நோட்டு வைத்திருப்பவர்கள் தங்கள் அக்கவுண்டில் டெபாசிட் செய்யலாம்.வங்கி கடன்களுக்கு திருப்பி செலுத்தலாம்.

Trending News

Latest News

You May Like