1. Home
  2. தமிழ்நாடு

ஒரு ஊரையே மிரள வைத்த 20 ரூபாய் பிரியாணி கடை!

Q

ஐந்து பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி, ஐந்து ரூபாய்க்கு பிரியாணி என்று திறப்பு விழா சலுகையாகச் சில கடைகளில் ஒரு நாள் மட்டும் அறிவிப்பார்கள்.
ஆனால் தூத்துக்குடியில் ஒரு கடையில் வெறும் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அந்த உணவகம்குறித்து கலெக்டருக்கே புகார் பறந்தது… என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு பல உணவகங்களில் மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. அதேநேரம் உணவகங்களைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 60 ரூபாயில் அல்லது 70 ரூபாயிலிருந்து தான் சாப்பாடுகள் விற்கப்படுகிறது.
வெரைட்டி ரைஸ் என்றால், 30 ரூபாய் தொடங்கி 50 ரூபாய், 60 ரூபாயெனக் கடையைப் பொறுத்து விற்கப்படுகிறது. அதேநேரம் கடந்த சில வருடங்களாகப் பிரியாணி மோகம் அதிகமாக உள்ளது.
முன்பு சாப்பாடு கடைகள் தான் சென்னை போன்ற பெரிய ஊர்களில் இருக்கும். இப்போது அவை எல்லாம் விழுந்துவிட்டன.
திரும்பிய பக்கம் எல்லாம் பிரியாணிக்கடைகளும், பாஸ்ட் ஃபுட் கடைகளும் வந்துவிட்டன. பிரியாணியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சென்னையின் ஃபேவரைட் உணவாக உள்ளது.
அதனால் விலை மற்ற ஊர்களை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. 100 ரூபாய்க்கு எல்லாம் தரமான பிரியாணி சென்னையில் பல இடங்களில் கிடைக்கிறது.
அதேநேரம் மற்ற ஊர்களில் இது சற்று அதிகமாகவே இருக்கும். அதேநேரம் திடீரென ஐந்து பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி, ஐந்து ரூபாய்க்கு பிரியாணி என்று திறப்பு விழா சலுகையாகச் சில கடைகளில் அறிவிப்பார்கள்.
அது ஒரு நாள் தான் அறிவிக்கப்படும். அடுத்த நாள் வழக்கமான விலையில் பிரியாணி விற்பனை செய்யப்படும்.
ஆனால் தூத்துக்குடியில் வெறும் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி நீண்ட நாட்களாக விற்பனை செய்யப்படுகிறது. இது மற்ற கடைக்காரர்களை ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் பொதுமக்களையுமே எப்படி 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்க முடியும் என்ற கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத்துக்கு தூத்துக்குடி மாநகரில் இருபது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவது குறித்து புகார்கள் பறந்தன.
மேலும் அவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யக் கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இருபது ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக் கூடத்தில் ஆய்வு நடத்தினார்கள்.
இந்த ஆய்வில் பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்குப் புறம்பான அம்சங்களோ கண்டறியப்படவில்லை.
இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், தயாரிக்கப்பட்ட பிரியாணியும் உணவு மாதிரி எடுத்துப் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
உணவுப் பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில், உணவு தயாரிப்புக்கூடம் மிகவும் அசுத்தமாகவும், சமைக்கும் பகுதியில் பூனை, நாய் போன்ற பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் பிரியாணிக்கு வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் விற்பனை செய்த உணவுப் பொருட்களுக்குரிய பில்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் உணவுப் பகுப்பாய்வு அறிக்கைகள் இல்லை என்று கூறப்படுகிறது. சமையலறை பாதுகாப்பற்று இருந்துள்ளது. இதையடுத்து பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமைத்தை இடைக்கால ரத்து செய்யத் தீர்மானித்துள்ளனர் அதிகாரிகள்.
அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்றும், இந்தக் கடைக்குச் சிக்கன் விற்பனை செய்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொண்டு தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like