1. Home
  2. விளையாட்டு

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா!!

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து கேமரூன் கிரீன் (52), டிம் டேவிட் (54) சாத்து முறையில் 187 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடி அரைசதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தினால் ஒரு பந்து மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.


டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா!!



இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இந்திய அணி 2022 டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து அதிக வெற்றிகளை இதுவரை பதிவு செய்துள்ளது.

2021 முதல் 14 முறை இலக்கை விரட்டியதில் இந்திய அணி 13 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதேபோல் 2022ம் ஆண்டில் இந்திய அணி 21 வெற்றிகளை டி20 சர்வதேசப் போட்டிகளில் பெற்றுள்ளது. இது 2021-ல் பாகிஸ்தான் பெற்ற அதிகபட்சமான 20 போட்டிகள் வெற்றிச்சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்தியா இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளது, அங்கு குழு கட்டத்தில் இந்தியா 5 போட்டிகளில் விளையாட உள்ளது. மறுபுறம், இந்திய அணி இறுதிப் போட்டியை எட்டினால், மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளன.


டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா!!



உலகக் கோப்பைக்குப் பிறகு, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதனால் இந்தியா இன்னும் 12 போட்டிகளில் வீதம் விளையாட வாய்ப்பு உள்ளது. அதில் இந்திய அணி பாதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட இந்தியாவின் உலக சாதனையை முறியடிப்பது கடினமான ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

Trending News

Latest News

You May Like