ஒரே வீட்டில் 2 மாதமாக நடந்த கொடூரம்.. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சிரழித்த காமூகன் !

ஒரே வீட்டில் 2 மாதமாக நடந்த கொடூரம்.. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சிரழித்த காமூகன் !

ஒரே வீட்டில் 2 மாதமாக நடந்த கொடூரம்.. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சிரழித்த காமூகன் !
X

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட தனது 15 வயது பேத்தியை பராமரித்து வந்தார். 

அச்சிறுமி அவ்வப்போது தனது பாட்டியுடன் சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது. எனினும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மூதாட்டி அவரை பாதுகாத்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி தனது பாட்டியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி  பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்துள்ளார். 

அப்போது திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அச்சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி இரண்டு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனை அறிந்த வெங்கடேசனின் தாயார் அச்சிறுமியை வெளியே அனுப்புமாறு கூறி தனது மகனுடன் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளார். 

ஆனால் வீட்டில் சிறுமியை சீரழித்து வந்த வெங்கடேசன் வேலை காரணமாக ஆந்திராவிற்கு சென்ற போது அவரது தாயார் சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

அதே பகுதியில் சுற்றித் திரிந்த போது வேறு ஒரு நபர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்து உள்ளார்.

அங்கிருந்தும் வெளியேறிய சிறுமியை ரயில்வே பாதுகாப்பு படையினர்  மீட்டு  அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in 

Next Story
Share it