1. Home
  2. தமிழ்நாடு

முத்ரா திட்டத்தில் 2% வட்டி மானியம் - மத்திய அரசு அதிரடி!

முத்ரா திட்டத்தில் 2% வட்டி மானியம் - மத்திய அரசு அதிரடி!


பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர்கள் பெறும் அனைத்து தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம்  குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் தொடங்க உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ரூ.50,000 வரை கடன்கள் வழங்கப்படும். முத்ரா கடன்களை வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கிப்பணி சாராத நிதிநிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதிநிறுவனங்கள் போன்ற முத்ரா லிமிட்டில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் வழங்குகின்றன.


தற்போது கொரோனா தொற்றால் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தில் சிறு அளவிலான கடன்கள் வழங்கப்படுகின்றன. 

newstm.in

Trending News

Latest News

You May Like