குடிபோதையில் ஏற்பட்ட மோதலால் 2 நண்பர்களை ஓட ஓட விரட்டி கொலை..!!

குடிபோதையில் ஏற்பட்ட மோதலால் 2 நண்பர்களை ஓட ஓட விரட்டி கொலை..!!

குடிபோதையில் ஏற்பட்ட மோதலால் 2 நண்பர்களை ஓட ஓட விரட்டி கொலை..!!
X

திருவான்மியூர் நடுக்குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி (வயது 43) என்ற பெண் கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார். இவருடைய 16-வது நாள் காரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சதீஷ்குமார் என்கிற பாபு (வயது 27), அருண் (வயது 22), தினேஷ் (வயது 22) ஆகிய 3 பேரும் பங்கேற்றனர்.

காரிய நிகழ்ச்சியில் நண்பர்கள் மூவரும் நன்றாக குடித்துவிட்டு உணவருந்தியுள்ளனர். அப்போது, அருண் விளையாட்டாக செருப்பை எடுத்து வீசிய போது செருப்பில் இருந்த மண் தினேஷ் சாப்பாட்டில் விழுந்துள்ளது. இதனால் தினேஷ்க்கும் அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகியுள்ளது.

இதையடுத்து அருணும், பாபுவும் ஒன்று சேர்ந்து தினேஷை தாக்கி உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த தினேஷ் மீன்வெட்டும் கத்தியுடன் ஆவேசமாக வந்து அருணையும், பாபுவையும் தாக்கி உள்ளார். உயிருக்கு பயந்து ஓடிய இருவரையும் கொலைவெறியுடன் ஓட, ஓட விரட்டி சென்று குத்தி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் ஊர் மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, நண்பர்களை கொலை செய்த தினேஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தான். இந்த இரட்டை கொலை சம்பவம் திருவான்மியூர் நடுக்குப்பம் பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it