2 கி.மீ. தூரம் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்!!

2 கி.மீ. தூரம் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்!!
X

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதபாத் மாவட்டம் போஜ்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தோழியுடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பிய அந்த பெண்ணை இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் காட்டு பகுதிக்கு கடத்திச் சென்றனர்.

அங்கு சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் பெண்ணின் ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவரை காட்டுப் பகுதியிலேயே விட்டுச் சென்றனர்.

பாதிப்புக்கு ஆளான 15 வயது சிறுமி வேறுவழியன்றி காட்டில் இருந்து வீடு வரை 2 கிமீ தூரம் நிர்வாணமாகவே நடந்து வந்துள்ளார். இந்த அதிர்ச்சி காட்சிகள் சாலையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த பெண்ணுக்கு அப்பகுதி மக்கள் யாரும் உதவி செய்யவில்லை. மன நலம் பாதிக்கப்பட்டவர் என நினைத்து சிலர் கல்லால் அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது வீட்டாரிடம் தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நிதின், கபில், அஜய், இம்ரான், நவ்ஷே அலி என்ற 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணை சுமார் 15 நாள்கள் கிடப்பிலேயே போடப்பட்டிருந்த நிலையில், பெண் சாலையில் நடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மொராதாபத் காவல்துறை கையிலெடுத்து நவ்ஷே அலி என்ற நபரை மட்டும் தற்போது கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it