உதவி ஆணையர்கள் 18 பேர் பணியிட மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

உதவி ஆணையர்கள் 18 பேர் பணியிட மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

உதவி ஆணையர்கள் 18 பேர் பணியிட மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!
X

தமிழக காவல்துறையில் உள்ள 18 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்

தமிழக காவல் துறையின் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழக காவல்துறையில் உள்ள 18 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சென்னை கிண்டி உதவி ஆணையர் ஜி.புகழ்வேந்தன் மீனம்பாக்கத்திற்கும், மீனம்பாக்கம் உதவி ஆணையர் ஆர்.அர்னால்டு எஸ்தர் ஆவடி மாநகர காவல்துறையின் ஆவண பாதுகாப்பு பிரிவிற்கும், சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சி. சார்லஸ் சாம் ராஜதுரை ராயப்பேட்டைக்கும், ராயப்பேட்டை உதவி ஆணையர் எஸ்.லட்சுமணன் ராயபுரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Next Story
Share it