“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.!

“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.!
 | 

“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.!

சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் அடிக்கடி ஆன்மிகம் என்ற பேரில் கொல்லிமலைக்குச் சென்று வந்து தான் சித்தர் என்று கூறுக்கொள்வார். இந்நிலையில் அவரது 16 வயது சிறுமிக்கு சித்தரான தந்தையால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக, கடந்த 24-ஆம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு  குழந்தைகள் அவசர உதவி எண்ணில் புகார் ஒன்று வந்தது. இந்த புகாரை ஏற்று, விசாரிப்பதற்காக அச்சிறுமியின் வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, அங்கு சிறுமியின் தந்தை இல்லை என்றும் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைக்கு சென்றதும் தெரியவந்தது.

“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.!புகாரின் தீவிரம் உணர்ந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்த, அவரது மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று, அப்பெண்ணின் தாய் மூலம் தகவல் தெரிவிக்க வைத்தனர். இதை நம்பி ஆவடி வந்த அந்த சித்தரை போலீசார், காத்திருந்து கச்சிதமாக பிடித்தனர். அதன் பின்னர் அவரை விசாரித்தபோதுதான், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி 10 வருடங்களாக வேலைக்க்கு செல்லாமல் இருந்த அந்த நபரின் குடும்பத்தை அவரது மனைவிதான் காப்பாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்தது.

“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.!

மேலும் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர் 6 மாதங்களுக்கு ஒருமுறை கொல்லிமலை சென்று வந்ததையும், தனது ஆயுள் கெட்டியாக வேண்டும் என்பதற்காக தனது 16 வயது மகளை மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதையும் அவர்  வாக்குமூலமாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது 16 வயது மகள் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP