வரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 16 அடி வெண்கல சிலை திறப்பு..!!

வரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 16 அடி வெண்கல சிலை திறப்பு..!!

வரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 16 அடி வெண்கல சிலை திறப்பு..!!
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் ஜூன் 3-ம் தேதி பிறந்த கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வராலாற்றில் ஒரு முறை கூட தோல்வி காணாத உறுப்பினார் என்ற பெருமைக்கு சொந்தகாரர். இவர் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை தமிழ்நாடு முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அன்றைய தினம், சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.இதையொட்டி கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதி சிலையை தீனதயாளன் சிற்பி வடிவமைத்து வருகிறார்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்படுகிறது. இந்த சிலை 16 அடி உயரம் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமான சிலையாக இந்த சிலை அமைக்கப்படுகிறது.

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி சிலையை திறந்து வைக்க, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்துள்ளார். இதற்காக சமீபத்தில், வெங்கய்யா நாயுடுவை, அவரது வீட்டில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை செயலர்இறையன்பு ஆகியோர் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it