1. Home
  2. தமிழ்நாடு

பஜாஜ் நிறுவன பணியாளர்கள் 140 பேருக்கு கொரோனா !! அதிர்ச்சியில் பஜாஜ் நிறுவனம்...

பஜாஜ் நிறுவன பணியாளர்கள் 140 பேருக்கு கொரோனா !! அதிர்ச்சியில் பஜாஜ் நிறுவனம்...


இச்சம்பவம் குறித்து , பஜாஜ் நிறுவனத்தின் தலைமை மனித வளத் தலைவர் , ரவி கைரன் ராமஸ்வாமி கூறுகையில் ; எங்களது வாலுஜ் தொழிற்சாலையில் சுமார் 8,100 ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் பணி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வாலுஜ் தொழிற்சாலையில் உள்ள 140 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எங்களின் மொத்த பலத்தில் வெறும் 2 சதவீதத்திற்கும் குறைவானது.

இரண்டு ஊழியர்கள் தொற்று காரணமாக உயிரிழ்ந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இப்படி தொடர்ந்து வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருவதால் எங்களின் வாலுஜ் தொழிற்சாலை மூடப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால் தொழிற்சாலையில் அனைத்துப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பணி நடந்து வருகிறது என்று விளக்கியுள்ளார். பஜாஜ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ;

ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை, வாலுஜ் தொழிற்சாலையில் எங்கள் ஊழியர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஆனால் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாட்டில் போடப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதனால் பல நிறுவனங்கள், ராணுவப் படையினர், போலீஸ், ஊடகத்தினர், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி செய்து வந்த பலருக்குத் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதே போல தான் எங்கள் நிறுவனத்திலும் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் எங்கள் ஊழியர்களுக்குச் சோதனை செய்வது, தடம் அறிவது, தனிமைப்படுத்துவது மற்றும் சானிடைஸ் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொழிற்சாலைகளில் மேற்கொண்டுள்ளோம். மொத்த நாட்டையும் போல நாங்களும் கொரோனா வைரஸோடு வாழப் பழகி வருகிறோம்.

பாதுகாப்பு நடவடிக்கைகளோடு எங்கள் பணிகளை சீராக செய்து வருவோம் என்று கூறியுள்ளது. பஜாஜ் நிறுவனத் தொழிற்சாலையில் மட்டுமல்ல, மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோட்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பஜாஜுக்கு ஏற்பட்டது போல ஒரே தொழிற்சாலையில் 140 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

Newstm.in

Trending News

Latest News

You May Like