கோர விபத்து : கோயிலுக்கு சென்று திரும்பிய 12 பேர் பலி!

கோர விபத்து : கோயிலுக்கு சென்று திரும்பிய 12 பேர் பலி!

கோர விபத்து : கோயிலுக்கு சென்று திரும்பிய 12 பேர் பலி!
X

லாரி - டிராக்டர் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்று திரும்பிய 12 பேர் உயிரிழந்தனர்.    

தெலங்கானா மாநிலம் காம்மம் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் ஒரு டிராக்டரில் ஆந்திராவில் வேதாத்திரி பகுதியில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணா மாவட்டம், ஜக்கையன்பேட்டை பகுதியில் டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று மோதியுள்ளது. இந்த கோர விபத்தால் டிராக்டர் நிலைகுலைந்தது. அதில் பயணித்த 2 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் ஜக்கையன்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து குறித்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் ஆந்திராவின்முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, விபத்து அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

Next Story
Share it