1. Home
  2. தமிழ்நாடு

ஒற்றைக் கல்லால் வடிவமைக்கப்பட்ட 1,100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு !!

ஒற்றைக் கல்லால் வடிவமைக்கப்பட்ட 1,100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு !!


இந்திய தொல்பொருள் ஆய்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு 9 வது பொது சகாப்தத்திலிருந்து ஒரு ஒற்றைக் மணற்கல் சிவலிங்கத்தை கண்டுபிடித்தது. வியட்நாமின் மை சன் சரணாலயத்தில் உள்ள சாம் கோயில் வளாகத்திலிருந்து சிவலிங்கம் தோண்டப்பட்டது.

ஒற்றைக் கல்லால் வடிவமைக்கப்பட்ட 1,100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு !!

வியாட்நாமின் குவாங் நாம் பகுதியில் ஏராளமான சிவலாயங்கள் உள்ளன. ஆனால் 1969-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இங்கிருக்கும் கோவில்களில் பெரும்பலான பகுதிகள் சிதைந்து போனது.

2011-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் குவாங் நாம் பகுதியில் உள்ள சிவலாயங்களில் மறுசீரமைப்பு பணி துவங்கியது. கோவில்களின் மறுசீரமைப்பிற்காக இந்தியா உதவுவது ஒரு கலாச்சார பரிமாற்றத்திற்கான எடுத்துக்காட்டு என்று அழைக்கப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற மறுசீரமைப்பு பணியின் போது 1100 ஆண்டுக்கால பழமையான ஒற்றைக் கல்லால் வடிவமைக்கப்பட் சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டது.இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அதில் ;

இந்தியா – வியாட்நாமிற்கு இடையே உள்ள நாகரீக தொடர்பை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது என்றுள்ளார். ஆஸ்ட்ரோனேசியாவின் சாம்ஸ் இனத்தவர் ஆட்சி காலத்தில் “மை சன்” என்று அழைக்கப்படும் இந்த கோவில் , கட்டுமானங்கள் 4ம் நூற்றாண்டு மற்றும் 14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வியட்நாமில் உள்ள இந்திய இந்து மதத்தின் ஆன்மீக வழிபாடுகளுக்காக இது கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

வியட்நாம் “நேஷனல் அட்மினிஸ்டரேஷன் ஆப் டூரிசம்” அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சாம்ஸ் இன மக்கள் சிவனை அதிக அளவில் வழிப்பட்டுள்ளன. அது பெரும்பாலும் ஒரு லிங்கமாகக் தான் காட்டப்படுகின்றன. அதே நேரத்தில் அவற்றின் சிற்பங்கள் எல்லா விதமான இந்து தெய்வங்களையும் சித்தரிக்கின்றன என கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Trending News

Latest News

You May Like