சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு தொற்று.. பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரிப்பு..!

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு தொற்று.. பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரிப்பு..!

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு தொற்று.. பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரிப்பு..!
X

சென்னை ஐஐடியில் கடந்த 19-ம் தேதி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என 6 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன. இதனால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம், ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான மாணவர்களில் நான்கு பேரிடம் சின்னம்மை, டெங்கு, டைபாய்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story
Share it