திதி கொடுக்க சென்றபோது சோகம் - படகு கவிழ்ந்து 11 பேர் பலி..!

 | 
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள காடேகாவ் என்ற கிராமத்தின் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இறந்த தங்கள் உறவினர் ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக ஹித்ரனா என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு படகில் சென்றனர்.

நடு ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது படகு தள்ளாட ஆரம்பித்தது. இதனால் படகில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். சிறிது நேரத்தில் படகு எடை தாங்காமல் நடு ஆற்றில் கவிழ்ந்தது.

அனைவரும் நீரில் தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த இரண்டு பேர் மட்டும் நீந்தி கரைக்குத் திரும்பினர். 4 பேர் ஆற்றில் மூழ்கினர். 7 பேரைக் காணவில்லை. இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்புத் துறையினரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை படையினரும் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழந்தை உட்பட 4 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களும் படகுகளில் சென்று தேடிவருகின்றனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திரா சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியை நேரில் பார்வையிட்டார்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்தது. இதனால் படகில் சென்றவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே கரையோர கிராமங்களில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP