தேர்ச்சி பெற்றது தெரியாமலேயே மீண்டும் 10ஆம் வகுப்பு படித்த மாணவன்!!

தேர்ச்சி பெற்றது தெரியாமலேயே மீண்டும் 10ஆம் வகுப்பு படித்த மாணவன்!!

தேர்ச்சி பெற்றது தெரியாமலேயே மீண்டும் 10ஆம் வகுப்பு படித்த மாணவன்!!
X

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், தேர்ச்சி பெற்றது தெரியாமல் மீண்டும் அதே பள்ளியில் ஓராண்டாக 10ஆம் வகுப்பு பயின்று வருவது தெரியவந்துள்ளது.

வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்து வரும் கணேசனுக்கு தற்போது பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. அப்போது கணேசனின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், தங்கள் மகன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றுவிட்டதாக தெரிவித்தது.

exam 1

அதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியதில்லை என்று ஆசிரியர்கள் கூறினர். இதனால் மாணவர் கணேசன் மற்றும் அவரது பெற்றோர் குழப்பம் அடைந்தனர். அப்போதுதான் கடந்தாண்டே மாணவர் கணேசன் 10ஆம் வகுப்பு பாஸ் ஆனது தெரியவந்தது.

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர் கணேசனை வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மீண்டும் 10ஆம் வகுப்பிலேயே சேர்த்து படிக்க வைத்திருக்கிறது.

vlr 1

மாணவரும், தான் பாஸ் ஆனது கூட தெரியாமல் கல்வி பயின்று வந்துள்ளாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it