1,088 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவை தொடக்கம்... முதலமைச்சர் அதிரடி!
1,088 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவை தொடக்கம்... முதலமைச்சர் அதிரடி!

ஆந்திராவில் 1,088 ஆம்புலன்ஸ்களின் சேவையை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினம் என்பதால் அன்று தினம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயவாடா பென்ஸ் கூட்டு ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.201 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 1,088 ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். நகர்ப்புறங்களில் இலவச சேவைக்காக 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ்களும், கிராமப்புறங்களில் மக்களின் இலவச மருத்துவ சேவைக்காக 104 எண் கொண்ட இலவச ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில் 26 ஆம்புலன்ஸ்கள் குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் ஊதியம் 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 28 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
newstm.in
Next Story