சென்னையில் பரபரப்பு... 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்!

சென்னையில் பரபரப்பு... 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்!

சென்னையில் பரபரப்பு... 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்!
X

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து பணிபுரிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

26 நாட்கள் பணி செய்தால் போதுமெனக் கூறி சென்னை அழைத்து வந்து விட்டு தற்போது முறையான உணவு, ஓய்வு வழங்காமல் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளர் 3 தினங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

newstm.in

Next Story
Share it