விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,006 மது பாட்டில்கள்.. அள்ளிச்சென்ற போலீசார்..!

விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,006 மது பாட்டில்கள்.. அள்ளிச்சென்ற போலீசார்..!
 | 

தைப்பூச கொண்டாட்டம்! 1,006 மதுபாட்டில்கள் பறிமுதல்!

வள்ளலார் தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகத்தில் நேற்று டாஸ்மாக்களுக்கு விடுமுறை. இந்தப்போதிலும் அனைத்து இடங்களிலும் கள்ளச்சந்தையில் மதுப்பாட்டில்கள் விற்பனையானதாக புகார்கள் உள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்களை போலீசார்  பறிமுதல் செய்தனர். பொன்னமராவதி அரசு மதுபானக்கடைகளின் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதுவும்  வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவலின் பேரில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் எஸ்.கருணாகரன் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

தைப்பூச கொண்டாட்டம்! 1,006 மதுபாட்டில்கள் பறிமுதல்!

அப்போது பெட்டிக் கடைகளில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 1006 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்ற காரையூரைச் சேர்ந்த க.அழகன்40) மற்றும் பிரபு(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP