1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!


நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், அதிகப்படியான பால் வழங்கும் முதல் மூவருக்கு கேடயமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

இதையடுத்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
WhatsApp_Image_2022-06-18_at_1
“தமிழகத்தில் 9 ஆயிரத்து 354 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 21 லட்சம் விவசாயிகள் அங்கத்தினராக இருக்கின்றனர். நாளொன்றுக்கு 42 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கோடி பசு மாடுகளும், 5 லட்சம் எருமை மாடுகளும் உள்ளன.

கடந்த ஆட்சியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ.50 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதை ரூ.81 கோடியாக உயர்த்தியது.

வரும் தீபாவளியையொட்டி ரூ.250 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவனத்தில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும். கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும். மேலும், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like