இவர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இவர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இவர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
X

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் நேற்று (1-ம் தேதி), மே தின நினைவு சின்னத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மே தின உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பின்னர் முதல்வர் கூறியதாவது:

“இதுவரை, கட்டுமானத் தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு 5000 ரூபாயாகவும் இருந்த நிலையில், இனி அனைவருக்கும் 20,000 ரூபாயாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம்.

அத்துடன், அமைப்பு சாரா தொழிலாளர்களின் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலக் கூடிய குழந்தைகளுக்கு 1000 ரூபாய் வழங்கக் கூடிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும், தொழிலாளர்களை வாழ்த்தக்கூடிய அரசு மட்டுமல்ல, வாழ வைக்கக்கூடிய அரசு திமுக அரசுதான். அந்த வகையில், இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசுதான். பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it