10 பிரதமர்கள்… 3 அதிபர்கள்! அதிர வைக்கும் பெகாசஸ் உளவு விவகாரம்!!

 | 

உலகை உலுக்கி வரும் 'பெகாசஸ்' உளவு விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், போராளிகள் உட்பட 40 பேரின் மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

rahul

இந்நிலையில், இந்தியா மட்டுமின்றி, உலகத் தலைவர்கள் பலரையும் பெகாசஸ் மென் பொருள் உளவு பார்த்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் பெகாசஸ் மென் பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

rahul

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் அமைச்சர்கள் உட்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தனி விசாரணை நடத்த, பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராம்போசா ஆகியோரும் பெகாசஸ் மென் பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP