1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கில் ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம் ! - மக்கள் அலறியடித்து ஓட்டம்..

ஊரடங்கில் ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம் ! - மக்கள் அலறியடித்து ஓட்டம்..


நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் உள்ளனர். இதனால் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்க துவங்கியுள்ளன.

ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென வெளியேறி அங்குள்ள கிராமத்தில் புகுந்தது. 

இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதன்பின்பு தகவல் அறிந்து வன பாதுகாவலர்கள் மற்றும் உள்ளூர் பாம்பு பிடி வீரர் ஒருவர் உதவியுடன் ராஜநாகம் பிடிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள வன பகுதியில் கொண்டு சென்று ராஜநாகம் விடப்பட்டது.

உலகிலேயே மிக நீள, மனிதர்களை கொல்லும் அதிக விஷம் கொண்டவையாக ராஜநாகம் உள்ளது.  இவை பிற பாம்புகளையும் உணவாக உட்கொள்ளும்.  இந்த வகை பாம்புகள் கடித்து விட்டால் அதில் இருந்து பிழைக்க மருந்து எதுவும் இல்லை.

newstm.in 

Trending News

Latest News

You May Like