தஞ்சாவூரில் 10 நாட்கள் தொடர் மின்வெட்டா? - மின்சார வாரியம் விளக்கம் !

தஞ்சாவூரில் 10 நாட்கள் தொடர் மின்வெட்டா? - மின்சார வாரியம் விளக்கம் !

தஞ்சாவூரில் 10 நாட்கள் தொடர் மின்வெட்டா? - மின்சார வாரியம் விளக்கம் !
X

பத்து நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு இருக்கும் என்று வெளியான தகவல் குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தஞ்சாவூரில் 10 நாட்களுக்கு மின்வெட்டு இருக்குமென சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வாட்ஸ் அப் குரூப்களில் வேகமாக பரவி வரும் இந்த செய்தியால் பொதுமக்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

மேலும் சிலர் 10 நாட்கள் மின்வெட்டு என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 

இந்நிலையில் இது குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பத்து நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு இருக்கும் என்று வெளியான தகவலில் உண்மையில்லை.

வரும் ஜூலை 28 மற்றும் 29 ஆம் தேதிகள் என ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பராமரிப்பு காரணமாக மின்வெட்டு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.  

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it