10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம்..!!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச்சில் நடத்தப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம், 8ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9.14 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில், மாணவர்கள் 4.59 லட்சம் பேரும், மாணவிகள் 4.55 லட்சம் பேரும் அடக்கம். இன்று காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் 91.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவீத பேரும், மாணவிகள் 94.66 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1,026 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி வீதம் 87.45 சதவீதமாகும். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாற்றத்திறனாளி மாணவர்கள் 10,808 பேர்களில் 9.703 பேர் (89.77) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பில் மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவிகிதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,718 பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. சிவகங்கை (97.53 சதவீதம்) இரண்டாம் இடமும், விருதுநகர் (96.22 சதவீதம்) மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. அந்த வகையில், 83.54 சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
பாட வாரியாக 100% மதிப்பெண் பெற்றவர்கள்:
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது. http://tnresults.nic.in, http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பதிவு செய்துள்ள அவர்களின் பெற்றோர்களின் போன் எண்ணுக்கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
.png)